குஷ்பு – நக்மா மோதல்?- திருநாவுக்கரசர் விளக்கம்

சென்னையில் நிருபர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொதுசிவில் சட்டம் தொடர்பாக குஷ்பு பேசியது அவரது சொந்த கருத்து என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். இந்த விவகாரம் தொடர் பாக குஷ்பு – நக்மா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளி யான செய்திகள் முற்றிலும் தவறானது. மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் குஷ்பு குறித்து நக்மா எதுவும் விமர்சனம் செய்யவில்லை.

கிறிஸ்தவ, இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் 100 ஆண்டு களுக்கும் மேலாக கல்வி வளர்ச்சிக்காவும், அடித்தட்டு மக்க ளின் மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டு வருகின்றன. எனவே, பொத்தாம் பொதுவாக மத கண்ணோட்டத் தோடு தொண்டு நிறுவனங்களை தடை செய்வது, வெளிநாட்டு நிதி பெற தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் சரியானது அல்ல.

வரும் 11-ம் தேதி புதுச்சேரி நெல்லித்தோப்பு, 12-ம் தேதி தஞ்சாவூர், 15-ம் தேதி அரவக் குறிச்சி, 16-ம் தேதி திருப்பரங் குன்றம் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன்.