வேன்- லாரி மோதி 14 பேர் பரிதாப பலி!

குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரின் அருகேயுள்ள சோக்காடா கிராமத்தை சேர்ந்த சிலர் வடக்கு குஜராத்தில் உள்ள அம்பாஜி ஆலயத்தை தரிசிப்பதற்காக ஒரு வேனில் சென்றனர். தரிசனத்தை முடித்துகொண்டு நேற்றிரவு அவர்கள் பகோதரா நெடுஞ்சாலை வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்றுகாலை ராஜ்கோட் நகரை நெருங்கும்போது எதிர்திசையில் வேகமாகவந்த ஒருலாரி வேனின்மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் வந்த 14 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.