நான் இதற்கு அடிமை! 12வது குழந்தையை பெற்றெடுத்த பிரித்தானிய பெண்!

குழந்தைகளை பெற்றெடுப்பதையே வேலையாக கொண்டுள்ள ஒரு தம்பதி தங்களது 12வது குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுத்துள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த 39 வயதான மேண்டி என்ற பெண்ணுக்கு இது 7வது பெண் குழந்தையாகும். இவருக்கு ஏற்கனவே 5 ஆண் குழந்தையும் உள்ளது.

இவர்கள் அனைவருக்கும் வயது 1 முதல் 23 வரை உள்ளது. இவர்கள் அனைவரும் புதிய வரவான 12வது குழந்தையை கொண்டாடி வருகின்றனர்.

 

16 வயதில் தனது முதல் குழந்தையை பெற்ற மேண்டி, தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக இது முடிவில்லாத தொடர் கதையாக சென்று கொண்டிருக்கிறது.

இது குறித்து மேண்டி கூறுகையில், ஆமாம், எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். பெரிய குடும்பமாக இருப்பதையும் நான் விரும்புவேன்.

 

உங்கள் குழந்தையை முதலில் தொடும் போது அது அபூர்வமான தருணமாக இருக்கும். 9 மாதத்தில் அந்த குழந்தை வயிற்றில் எட்டி உதைக்கும் அனைத்தும் எனக்கு பிடித்த விடயம்.

இது எல்லாம் எளிதான காரியம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் வித்தியசமானது. நாங்கள் திட்டமிட்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

12 குழந்தைகளுடன் போதும் என்று மேண்டி கூறினாலும், அவர் கணவரின் இலக்கு 20 குழந்தையாம்.22r