மம்மிக்கு டாடி முத்தம் கொடுத்துட்டாரே… உதடு பிதுக்கி அழும் “க்யூட்” பாப்பா!

மேரிலான்ட், அமெரிக்கா: அமெரிக்காவின் மேரிலான்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் அழுகை இணையதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்தக் குட்டிப் பாப்பாவின் பெயர் எல்லா. எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கும் அந்தக் குழந்தைக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது.. அது அப்பாவும், அம்மாவும் முத்தமிடுவது. அம்மாவும், அப்பாவும் முத்தமிட்டுக் கொண்டால் போதும்.. அவ்வளவுதான் வீறிட்டு அழுது விடுவாள் குட்டி எல்லா.

இந்த வீடியோவில் அம்மா கிரிஸ்ஸி ஹன்னகனும், அப்பா மாட் ஹன்னகனும் முத்தமிடுவதைப் பார்த்து எல்லா முகம் சுருங்கி, உதடு பிதுக்கி, கண்ணில் “ஜலம் விட்டு” அழும் காட்சி செம க்யூட்டாக இருக்கிறது. இந்த வீடியோவை கிரிஸ்ஸி ஹன்னகன் அக்டோபர் 3ம் தேதி ஷேர் செய்துள்ளார். அது வைரலாக பரவி பிரபலமாகி விட்டது இதுவரை இந்த வீடியோவை 1.4 கோடி பேர் பார்த்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரியாக்ட் செய்துள்ளனர். 1.3 லட்சம் பேர் ஷேர் செய்துள்ளனர்.