ஜெயலலிதா குறித்த வதந்தி: திமுவினரின் பேஸ்புக்க பக்கம் முடக்கம்

முதல்வர் ஜெயலலிதா குறித்த வதந்திகளை பரப்புவதாகக் கூறி, திமுகவின் பேஸ்புக் மற்றும் வலைதளங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு உள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டத் துறை இணைச் செயலர் பரந்தாமன், தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா,வெற்றி கொண்டான் ஆகியோர், சென்னை மாநகர காவல் ஆணையர் சைபர் கிரைம், துணை ஆணையர் சைபர் கிரைம், உதவி ஆணையர் ஆகியோருக்குகோரிக்கை ஒன்றை அளித்தனர்.

அதில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தொடர் பாக, சைபர் கிரைம் பொலிசார் நடவடிக்கை எடுத்து சிலரை கைது செய்துள்ளனர். வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், இந்த நடவடிக்கையின் பெயரால் திமுகவை சார்ந்தவர் களின் முகநுால் கணக்கு வலைதளங்களின் செயல் பாடு ஆகியவற்றை, சைபர் கிரைம் பொலிசார் முடக்கிய தோடு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை தாக்கி வழக்கு பதிவு செய்யப் போவதாக அச்சுறுத்தி உள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பாக, திமுக உறுப்பினர்கள் மீதான இந்த நடவடிக்கைக்கு உடனடியாக, தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.