ஜெயலலிதா உயிரிழந்ததாக தமிழச்சி போல் பதிவிட்ட பாதிரியாருக்கு நேர்ந்த கதி

முதல்வர் உடல்நலம் குறித்து தமிழச்சி வெளியிட்ட பதிவை காப்பி அடித்து பேஸ்புக்கில் பகிர்ந்த பாதிரியார் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி என்பவர் முதல்வர் உடல்நலம் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவலை ஒன்றை பதிவிட்டார்.

குறித்த பதிவை காப்பி அடித்து பாதிரியார் ஒருவர் தன்னுடை கருத்து போல் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பதிவு குறித்து அதிமுக சார்பில் பொலிஸ் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சைபர் கிரைம் பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த பேஸ்புக் கணக்கு கணக்கு தூத்துக்குடி மாவட்டதைச் சேர்ந்த 24 வயதான ஆண்டனி ஜேசுராஜ் என்பவரது என்று தெரியவந்துள்ளது.

அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.625-0-560-350-160-300-053-800-668-160-90