தனது பயோப்பிக்கில் இருந்து டோனி ஏன் தன் அண்ணனை முற்றிலுமாக நீக்கினார்?

எம்.எஸ். டோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி நூறு கோடிகளை வசூல் சாதனை செய்து, இன்னமும் உலகம் முழுக்க பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மா, அப்பா, அக்கா, நண்பர்கள், கோச், யுவராஜ் சிங், இழந்த காதலி உட்பட தன் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த பலரையும் திரையில் இடம்பெற செய்திருந்தார் டோனி மற்றும் இப்படத்தின் இயக்குனர்.

ஆனால், உண்மையில் டோனிக்கு உடன் பிறந்தவர்களில் அக்கா மட்டும் இல்லை, ஒரு அண்ணனும் இருக்கிறார்.

அவர் டோனியின் பயோப்பிக்கில் இடம் பெறாமல் போனதற்கு என்ன காரணம்….

டோனியின் மூத்த அண்ணன் தான் நரேந்திர சிங் டோனி. டோனியின் பயோப்பிக்கில் நடிக்க வேண்டி இவரிடம் ஒருவர் கூட செல்லவில்லை. சமீபத்தில் இதுக்குறித்த கேள்விகளுக்கு நரேந்திர சிங் டோனியே பதிலளித்தார்.

டோனியின் சிறுவயதில் நான் அவருடன் இருக்கவில்லை. அவரது குழந்தை பருவத்தில் நான் மிக குறுகிய அளவில் தான் பங்குவகிதேன். சிறுவயதில் அவர் விளையாடிய ஓரிரு முக்கிய ஆட்டங்களை மட்டும் தான் நான் பார்த்துள்ளேன் என்கிறார் நரேந்திர சிங் டோனி.

டோனியின் பயோப்பிக் முற்றிலும் டோனியை சுற்றி நிகழும் ஒரு கதை. அவரை சுற்றி அவரது முக்கிய நாட்களில், கதைக்கு தேவைப்பட்ட பகுதிகளில் நான் அவருடன் இல்லை. அதனால் தான் நான் படத்தில் சேர்க்கப்படவில்லை, என்கிறார் நரேந்திர சிங் டோனி.

டோனியின் குழந்தை பருவம், அவர் பட்ட கஷ்டங்கள், மஹி எப்படி எம்.எஸ்.டி ஆனார் என்பது தான் பயோப்பிக்கின் கதை. அவரது உறவுகளை பற்றி இல்லை என கிரிக்கெட் கண்ட்ரி என்ற தளத்திற்கு ஒரு பதிலில் நரேந்திர கூறியுள்ளார்.

டோனியைவிட நான் பத்து வயது பெரியவன். டோனி கிரிக்கெட் பேட்டை தூக்கிய போது, நான் எனது மேற்படிப்பை முடித்துவிட்டேன். நான் அவனுடன் (டோனி) இல்லை என்ற போதிலும். அவனுக்கு ஒரு தார்மீக ஆதரவாக இருந்துள்ளேன். இதற்காக நான் படத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

டோனியின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பது எப்போதுமே எனக்கு ஒரு பெருமை தான் என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் நரேந்திர சிங் டோனி!