கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி பல கோடி மோசடி புகார் வழக்குப்பதிவு

இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி சாக்ஷி மீது டெல்லி போலீசார் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் சாக்ஷி ,ரகிதி எம் எஸ்டி (Rhiti MSD Almode Pvt. Ltd) என்ற நிறுவனம் தொடங்கியதாவும், இதில் சாஷிக் டோனி, அருண் பாண்டே, சுபவதி பாண்டே, பிரதீமா பாண்டே ஆகியோர் பங்குதார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதில் டெனிஷ் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தமாக 11 கோடி ரூபாய் தருவதாக பேசப்பட்டதாகவும், ஆனால் இவர்கள் நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வரை 2.25 கோடி ரூபாய் தான் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கும் மேற்பட்ட தொகை தராததால் டெனிஷ்  நிறுவனம் டெல்லியில் உள்ள குருகிராம் காவல் நிலையத்தில் அந்த நிறுவனத்தின் மீது புகார் செய்துள்ளனர்.

ஆனால் அருண் பாண்டேவோ பாதிக்கும் மேற்பட்ட தொகை கொடுத்து விட்டதாக கூறிவருகிறார்.

இந்நிலையில் டோனியின் மனைவியான சாக்ஷி இந்நிறுவனத்தில் பங்கு தாராராக இருந்து விலகி ஒரு வருடம் ஆன நிலையில் அவருடைய பெயரும் இந்த மோசடி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, இந்திய கிரிக்கெட் வீரர் டோனிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.