இலங்கை அணி மீது லாகூரில் தாக்குதல் நடத்திய குழுவிற்கு மூளையாக செயற்பட்டவர் சுட்டுக்கொலை

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கெட் அணி மீது தாக்­குதல் நடத்திய தீவி­ர­வாத குழு­விற்கு மூளை­யாக செயற்­பட்ட குஹாரி அஜ்மல் நேற்று ஆப்­கா­னிஸ்தானில் வைத்து சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக வெளி­நாட்டு செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இலங்கைக் கிரிக்கெட் அணி 2009 ஆம் ஆண்டு பாகிஸ்­தா­னு­க்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டி­ருந்­த­போது, போட்டி நடை­பெறும் கடாபி மைதா­னத்­திற்கு அணி வீரர்கள் பஸ்ஸில் சென்­று­கொண்­டி­ருந்த வேளையில், அந்த பஸ் மீது ஆயுதம் தாங்­கிய 10 பேர் கொண்ட தீவி­ர­வாத குழு­வொன்­றினால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

இதன் போது ரொக்கெட் தாக்­கு­தலும் நடத்­தப்­பட்­டது.இந்த சம்­ப­வத்­தின்­போது 6 வீரர்கள் சிறு காயங்­க­ளுக்கு உள்­ளா­கினர். மற்றும் 8 பாகிஸ்தான் நாட்­ட­வர்­களும் கொல்­லப்­பட்­டனர்.

அந்தச் சம்­ப­வத்­திற்கு பிறகு பாகிஸ்தான் சென்று எந்த அணியும் இது­வரை விளை­யா­ட­வில்லை. இந்­நி­லையில் அந்தச் சம்­ப­வத்­திற்கு மூளை­யாக செயற்­பட்ட குஹாரி அஜ்மல், ஆப்­கா­னிஸ்­தானின் பகி­டிக்­காவில் மறைந்­தி­ருந்­த­போது ஆப்­கா­னிஸ்தான் இரா­ணு­வமும் நேட்டோ படையும் மேற்­கொண்ட தேடுதல் வேட்­டை­யின்­போது சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவர் லஸ்கர் – ஈ – ஜாங்­கவி அமைப்பைச் சேர்ந்­தவர் என்றும் இந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கடந்த மாதம் லாகூரில் வைத்து பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.l_117326_073525_updates lahore_02