கிளிநொச்சியில் வாய்பேச முடியாத இரண்டு பிள்ளைகளுடன் ஒருவேளை உணவிற்கு தவிக்கும் உறவுகள்

இறுதி யுத்தத்ததை சந்தித்து தங்கள் துயரங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பல ஆயிரம் தமிழ் மக்கள் இன்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

நாளாந்தம் தங்களுடையை வாழ்கையை எப்படி நடாத்துவது என்ற ஏக்கத்துடன் அவர்களின் பொழுது விடிகின்றது.

அப்படி தனது வாழ்க்கை துணைவரை இறுதி யுத்ததில் தொலைத்துவிட்டு தனது மகன் ஒருவரை தேச விடுதலைக்காய் மாவீரனாக கொடுத்து விட்டு வாய்பேச முடியாத இரண்டு பிள்ளைகளுடன் கிளிநொச்சிமாவட்டத்தின் பாரதிபுரம் என்னும் கிராமத்தில் வசித்து வருகின்றார்.

இவர்களால் நாளந்தம் தங்களுடைய அடிப்படைத்தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடிய வில்லை.

குறிப்பாக உணவு மற்றும் உடைகளை கூட இவர்களால் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் தற்போது காணப்படுகின்றது.

இவர்களின் வாழ்க்கை போராட்டத்தில் தொடரும் துயரங்களுக்கு நிச்சயம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

69 வயதான இராமாயி தனது இரண்டு வாய்பேச முடியாத மூளை நலிவுற்ற மகன்மார்களையும் தனிமையில் வீட்டில் விட்டு கூலிவேலைக்கு கூட போகமுடியாத துயர நிலையை அனுபவிப்பதாக விபரிக்கிறார்.

இவ்வாறு தான் வேலைக்கு சென்றால் மகன்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

இதனால் இவர்களுக்கான உணவைக்கூட தன்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அந்த தாயின் ஏக்கமாக காணப்படுகின்றது.

கருணை உள்ளம் கொண்ட அன்பிற்குரிய உடன் பிறப்புக்களே உங்களின் உடன் பிறப்பாய் இவர்களை நினைத்து உங்களால் முடிந்தளவு இவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முன்வாருங்கள்.fotorcreated-458 fotorcreated-459

இது அன்பான எமது வாசகர்களுக்கான வேண்டுகோள்..

குடும்ப விபரம்

மாரிமுத்து இராமாய்-தாய்
மாரிமுத்து பழனிச்சாமி- மகன்
மாரிமுத்து உதய குமார்-மகன்
வங்கி:- இலங்கை வங்கி
வங்கி கணக்கு இலக்கம்:79695457
தொலைபேசி இலக்கம் :0770286668 (சுபாஸ்)