மீண்டும் தனது லீலைகளை தொடங்கிவிட்டாரா உசைன் போல்ட்?

ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல் வீரர் போல்ட் பவாரியன் அழகி ஒருவருடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருப்பதை போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உலக மக்கள் அனைவராலும் மின்னல் வீரர் என்று போற்றப்படுபவர் ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட். இவர் அண்மையில் நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் மூன்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

ரியோ தொடர் முடிந்தவுடன் போல்ட் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதைக் கண்ட அவருடைய காதலி போல்ட் மீது கடும் அதிருப்திக்கு ஆளானார்.

அதன் பின் அதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில் தன் காதலியுடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்ற புகைப்படத்தை போல்ட் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்.

தற்போது அவர் பவாரிய அழகி ஒருவருடன் நெருக்கமாக பேசுவதைப் போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள மூனிச் மாநகரில் பாரம்பரிய திருவிழாவான ஆக்டோபெர்பெஸ்ட் திருவிழா நடைபெற்றது. இதில் வழக்கத்திற்கு மாறாக போல்ட் பரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார்.

அத்திருவிழாவில் உணவு அருந்தும் இடத்தில் போல்ட் பாவாரிய அழகி ஒருவருடன் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் அப்பெண்ணுடன் நெருக்கமாக பேசுவதைப் போன்றும் உள்ளது.

தன் மீது விழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த போல்ட் மீண்டும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைப் போன்று புகைப்படம் வெளியாகியுள்ளது, தனது லீலைகளை போல்ட் மீண்டும் ஆரம்பித்துவிட்டாரா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.625-0-560-350-160-300-053-800-668-160-90-1 625-0-560-350-160-300-053-800-668-160-90-2 625-0-560-350-160-300-053-800-668-160-90-3 625-0-560-350-160-300-053-800-668-160-90-4 625-0-560-350-160-300-053-800-668-160-90