கம்பீருக்கு இந்திய அணியில் வாய்ப்பு!

கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக கவுதம் காம்பீர் இடம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரராக அசத்தி வந்த கவுதம் கம்பீர், மோசமான பார்ம் காரணமாக கடந்த 2014ல் இருந்து அணியில் சேர்க்கப்படவில்லை. கடைசியாக ஓவலில் நடந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 3 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கம்பீர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். துலீப் டிராபியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் முதல் டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் 2வது டெஸ்டில் அவர் இடம் பிடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் ராகுல் இடம்பெறாவி்ட்டால் கம்பீருக்கு அணியில் இடம்கிடைக்கும் என கூறப்படுகிறது.