வெள்ளி பதக்கம் வென்ற சிந்து ஆடை சர்ச்சையில் சிக்கினார்!

ரியோ ஒலிம்பகிக் போட்டியின் பாட்மிண்டன் பிரிவில இந்தியா சார்பில் வெள்ளி பதக்கம் வென்ற ஆந்திராவைச் சேர்ந்த பி.வி.சிந்து, தற்போது ஆடை சர்ச்சையில் சிக்கி உள்ளார். மும்பை மிரர் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது, வெள்ளி பதக்கம் வெல்வதற்கான போட்டியில் யோனக்ஸ் ஆடையை சிந்து உடுத்தி இருந்தார்.

இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் லின் நிங். ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய ஒலிம்பிக் கழகத்துடன் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை லி நிங் மேற்கொண்டுள்ளது. ஆனால் சிந்து மட்டுமின்றி பிற விளையாட்டு வீரர்களும் லி நிங் நிறுவனத்தின் ஆடையை அணியவில்லை என கூறப்பட்டுள்ளது.

இது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.இந்த செய்தி ஆதாரத்தை குறிப்பிட்டு லி நிங் நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தர் மகேந்திர கபூர் இந்திய ஒலிம்பிக் கழகத்திடம் புகார் அளித்துள்ளார். லி நிங் நிறுவனம் அளித்த ஆடை நிறங்களை சிந்து உள்ளிட்ட வீரர்கள் விரும்பாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

குறிப்பாக சிந்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களையே தனது ராசியான நிறமாக கருதியதால் தான் பங்கேற்ற போட்டிகளில் அந்த நிற ஆடைகளை அணிந்துள்ளார். துவக்கத்தில் லி நிங் நிறுவன ஆடைகளை சிந்து அணிந்ததாகவும், பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் அதனை தவிர்த்ததாக கூறப்படுகிறது.