சிந்து, சாக்ஷிக்கு BMW கார் கொடுத்தது சச்சின் இல்லை! பணம் கொடுத்தவர் யார் தெரியுமா?

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் பதக்கம் வாங்கி பெருமை சேர்த்தனர்.

இவர்களுக்கும், ஜிம்னாஸ்டிக்கில் 4ம் இடம் பிடித்த தீபா கர்மாகருக்கும், பயிற்சியாளர் கோபிசந்துக்கும் சச்சின் டெண்டுல்கர் BMW கார் வாங்கி தந்தார்.

ஆனால் இந்த கார்களுக்கான பணம் தந்தது சச்சினின் நண்பரும், ஹைதராபாத் பேட்மிண்டன் அசோசியேஷன் தலைவருமான தொழிலதிபர் வி.சாமுண்டேஷ்வர் தான்.

இதற்கு முன்பாக விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு கார்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.