ஈபிள் கோபுரத்தில் ஃபேஷன் ஷோ: வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற உள்ளது

பிரான்சின் பாரீஸ் நகர அடையாளச் சின்னமாக விளங்கும் ஈபிள் கோபுரத்தில் முதன்முறையாக ஃபேஷன் ஷோ நடைபெற உள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற உள்ள குறித்த நிகழ்விற்கு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் ஈபிள் கோபுரத்தை பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில், பிரான்ஸ் – ஐரோப்பியன் இந்தியன் ஃபேஷன் அமைப்பின் சார்பில், ஈபிள் கோபுரத்தில் ‘பிரெஞ்ச் – ஐரோப்பியன் இண்டியன் பேஷன் வீக்’ என்ற பெயரில் இடம்பெற உள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 21, 22, 23 ஆகிய திகதிகளில் 3 நாட்கள் ஃபேஷன் ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஃபேஷன் ஷோவில் பங்கேற்க அனைத்து நாடுகளும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்தில் ஃபேஷன் ஷோ ஒன்று நடைபெற உள்ளமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.