பிரான்சின் தொடரும் இஸ்லாமிய நீச்சல் ஆடைக்கான தடை!!

புர்க்கினி (burkini) எனப்படும் இஸ்லாமிய நீச்சல் ஆடையினை, கான் கடற்கரையிலோ அல்லது கடலிலோ பயன்படுத்துவதை, கான் (cannes) மாநகரசபை தடை செய்ததோடு, மீறினால் குற்றப்பணமும் அவிடப்படும் என எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து Alpes-Maritimes இலுள்ள கடற்கரை நகரமான Villeneuve-Loubet இன் மாநகரசபையும், புர்க்கினிக்குத் தடை விதித்துள்ளது. 1ம் திகதி யூலை மாதத்திலிருந்து, 31ம் திகதி ஓகஸ்ட் மாதம் வரை, ஒல்வொரு வருடமும் தகுந்த நீச்சல் ஆடை இல்லாமல், கடலில் குளிப்பதை இந்த இரண்டு நகரங்களும் தடை செய்துள்ளன. மதச் சார்பின்மை மற்றும் சுகாதாரக் காரணங்களிற்காக, இந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமாக புர்க்கினி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது, ஏனைய கடற்கரை நகரங்களிலும், விரைவில் பிரகடணப்படுத்தப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.