இன்றைய ராசி பலன் 17-07-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: மதியம் 2.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளி ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக் யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். மதியம் 2.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சாமர்த்தியமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளை களின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் இரட்டி ப்பு லாபம் உண்டு. அமோகமான நாள்.

  • கடகம்

    கடகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய கருத்துகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். விருந்தினர்களின் வருகை உண்டு. புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: இன்றையதினம் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதா யம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட் டங்கள் தீட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • துலாம்

    துலாம்: இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பாதியில் நின்ற வேலைகளையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: மதியம் 2.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களைப் பற்றிய வதந் திகளை முறியடித்து முன் னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: கணவன்-மனைவி க்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபா ரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். மதியம் 2.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • மகரம்

    மகரம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் பெருமையாகப் பேசப்படுவீர் கள். பணவரவு அதிகரிக்கும். வேற்று மதத்தவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். சகோதரர் களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண் டாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • மீனம்

    மீனம்: சொன்ன சொல் லைக் காப்பாற்றத் துடிப் புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களு டன் மனம்விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படை ப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சாதித்துக் காட்டும் நாள்.