சுவிட்சர்லாந்தின் தேசிய அணியில் இலங்கைத் தமிழர்

ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார்.

ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan Somasundaram, Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான Suganthan Somasundaram இடம்பிடித்துள்ளார்.
Suganthan Somasundaram தனது திறமையின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் தேசிய அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.