பரிஸ் பொலிஸ் தளபதி கொலை! தாக்கியவர் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்?

பரிஸில் உள்ள புறநகர் பகுதியான மக்னான்விலியில், பொலிஸ் தளபதியை கடுமையாக தாக்கி கொன்ற குற்றவாளி, ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என, ஐ.எஸ் அமைப்புக்கு சொந்தமான Amaq செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் குறித்த தாக்குதலை ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவரே மேற்கொண்டார் என்பதை உத்தியோகபூர்வமாக எவரும் பொறுப்பேற்கவில்லை என, தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெறித்தனமான கத்திக்குத்து தாக்குதலை நேரில் பார்வையுற்ற ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “குற்றவாளி, சிவில் உடையில் இருந்த பொலிஸ் தளபதியை கத்தியால் குத்தி தாக்கும் போது, அல்லாஹூ அக்பர் என உரக்க கத்தினார்” என தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தளபதியை தாக்கிவிட்டு, அந்த தளபதியின் வீட்டினுள் நுழைந்த குறித்த ஆண், அங்கிருந்த பெண் மற்றும் 03 வயது சிறுவனை பணயக்கைதி போல் வைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி அந்த ஆணை கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலன்ட் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டதோடு, “எலிசி மாளிகையில் இது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு கூட்டம் ஒன்று கூட்டப்படும்” என தெரிவித்தார். குறித்த கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள சிறுவன் தற்போது வைத்திய பராமரிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக தாக்கப்பட்டு பரிஸ் பொலிஸ் தளபதி கொலை!

பரிஸில் உள்ள புறநகர் பகுதியான மக்னான்விலி (Magnanville) எனும் இடத்தில், நேற்று (திங்கட்கிழமை) சிறப்புப்படை பொலிஸ் தளபதி ஒருவர் கடுமையாக குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெறித்தனமான தாக்குதல், அவரது வீட்டின் முன்னாலேயே நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட குற்றவாளி, கொலைசெய்யப்பட்ட பொலிஸாரின் வீட்டினுள் இருந்ததாகவும் அவர் பின்னர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் தனபதியின் வீட்டை சோதனை செய்து பார்த்ததில், பெண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் இருந்தமை கெண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் பொலிஸ் தளபதியின் மனைவியாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அதே வேளை, அந்த வீட்டிலிருந்த 03 வயதுடைய சிறுவன் ஒருவன், பாதுகாப்பாக அங்கிருந்த பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளான்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர், “குற்றவாளி பொலிஸ் தளபதியை கடுமையா தாக்கி கொலை செய்தமைக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை” என தெரிவித்தார்.

தற்போது இந்த கொலை விவகாரம் தொடர்பில் பரிஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.021-1