விற்பனைக்கு மனித மாமிசமா? கடுமையாக மறுப்பு தெரிவித்த சீனா

பதப்படுத்தப்பட்ட மனித மாமிசத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு உணவாக ஏற்றுமதி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சீனா கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் பணிபுரிந்துவரும் சாம்பியா நாட்டவரான பெண்மணி ஒருவர் ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை தகவலில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மாட்டிறைச்சி உணவுகளை உண்ண வேண்டாம் என்றார்.

மேலும் இது தொடர்பாக சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு எச்சரித்தார். அந்த புகைப்படங்கள் சாம்பியாவில் மக்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் சாம்பியாவில் இருந்து வெளியான இத்தகவலை உயர்மட்ட அதிகாரிகள் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளனர். பெயர் குறிப்பிட மறுத்துள்ள அப்பெண், உயிரிழந்த மனித உடல்களை சேகரித்து மாமிசத்தை பதப்படுத்தி மாட்டிறைச்சி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே சாம்பியாவுக்கான சீன தூதர் இத்தகவல் குறித்து மறுப்பு தெரிவித்தார். சாம்பியாவில் உள்ள உள்ளூர் நாளேடு ஒன்று வேண்டுமென்றே இதுபோன்ற பொய்களை பரப்பி மக்களை பீதியடைய செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இது கண்டிப்பாக ஏற்புடையதல்ல என்றார்.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக வெளியான புகைப்படங்கள் அனைத்தும் Resident Evil 6 வீடியோ ஹேமின் காட்சிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.maaddirachchi