தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷா 2 மாத கர்ப்பம்…?

தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை பிரதியுஷா இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தி சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை பிரதியுஷா. இவர் நடித்த இந்தி சீரியல் ஒன்று மண்வாசனை என்ற பெயரில் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்தவாரம் வெள்ளிக்கிழமையன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் பிரதியுஷா.pratyusha01

திசு பரிசோதனை அறிக்கை…
அதாவது, பிரதியுஷாவின் பிரேதப் பரிசோதனையில் அவரது கருப்பையில் தடித்த வெள்ளைநிற திரவம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவர் கர்ப்பமாக இருந்தார் என கருதப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அவரது திசு பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் எதையும் உறுதி செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணை…
தொடர்ந்து பிரதியுஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தெளிவில்லாத நிலை காணப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து பிரதியுஷா கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இதனால், பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டபோது, கர்ப்பமாக இருந்தார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவு…
இதற்கிடையே போலீசாரின் விசாரணையின் போது, ராகுலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.pratyusha02