அஜித், விஜய்க்கே கடும் போட்டி கொடுத்த சிம்ரன்

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் மட்டுமே பல வருடங்களாக நிலைத்து நிற்பவர்கள். ஆனால், ஹீரோயின்கள் மார்க்கெட் இருந்தால் 5 வருடம் இல்லையெனில் 5 படம் தாக்குப்பிடிப்பது கடினம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் சுமார் 12 வருடங்கள் முதல் இடத்திலேயே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் சிம்ரன்.

இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக கருதப்படும் அஜித், விஜய்யே இவருடன் நடித்த போது மிரண்டுள்ளனர். இதை ஒரு பேட்டியில் விஜய்யே கூறியுள்ளார்.

எனக்கு சிம்ரனுடன் நடனமாடும் போது தான் கொஞ்சம் பயமாக இருக்கும், ஏனெனில் அவர் ஒரு ஆணுக்கு நிகராக நடனமாடுபாவர் என விஜய் கூறியிருந்தார்.

இதேபோல் அஜித் வாலி படத்தில் சிம்ரன் நடிப்பை கண்டு நான் வியந்தேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் கதை விவாதம் நடக்கும் போதே சிம்ரன் கால்ஷிட்டை வாங்குகள் என்று கூறி கொண்டு தான் அமர்வார்களாம். கிட்டத்தட்ட தற்போது தலதளபதி மார்க்கெட் இருக்கும் அளவிற்கு சிம்ரன் கால்ஷிட் அப்போது மிகவும் காஸ்ட்லீ(Costly).

மேலும், சிம்ரன் முதன் முதலாக சூர்யாவிற்கு ஜோடியாக நேருக்கு நேர் படத்தில் தான் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே ஒன்ஸ் மோர், விஐபி என ஒரு சில படங்கள் வெளிவந்து விட்டது.

அதேபோல் சந்திரமுகி படத்தில் முதலில் ஜோதிகா கதாபாத்திரத்திற்குஐஸ்வர்யா ராயிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம், அவரால் நடிக்க முடியாத போது, அடுத்து ரஜினியே சிம்ரனிடம் கேளுங்கள் என்று தான் கூறினாராம். அவராலும் நடிக்க முடியாத காரணத்தால் தான் ஜோதிகாஅதில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த சிம்ரன் இன்று தன் 40வது வயதில் காலடி எடுத்து வைக்கின்றார். இவருக்கு நெற்றிக்கண்  சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.simran_special001