நட்சத்திர கிரிக்கெட், 8 அணிகள் பெயர்கள் அறிவிப்பு- உங்கள் பேவரட் நடிகரின் டீமுக்கு என்ன பெயர்?

நடிகர் சங்க கடனை அடைக்க ஏப்ரல்-17ம் தேதி பிரமாண்ட கிரிக்கெட் போட்டி நடக்கின்றது. இதில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளது. ஒவ்வொரு அணியிலும் 6 நபர்கள் விளையாடவுள்ளனர்.

இப்போட்டி 6 ஓவர் கொண்டவை. மேலும், இந்த 8 அணிகளின் கேப்டனாக சூர்யா, விஷால், கார்த்தி, ஆர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் விளம்பர தூதுவராக சமந்தா, த்ரிஷா, நயன்தாரா, காஜல் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த எட்டு அணிகளின் பெயர்கள் இதோ உங்களுக்காக… ‘மதுரை காலேஜ்’, ‘சென்னை சிங்கம்ஸ்’, ‘நெல்லை டிராகன்ஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’, ‘திருச்சி டைகர்ஸ்’, ‘ராமநாடு ரைனோஸ்’, ‘கோவை கிங்ஸ்’ மற்றும் ‘சேலம் சீட்டாஸ்’ என்று 8 அணிகளுக்கு பெயரிட்டு இருக்கிறார்கள்.cricket_actor001