இப்படியா ஒரு பதிலை கூறினார் ரித்திகா சிங்- கோபத்தில் ரசிகர்கள்

இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவருக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ளது.

இதுக்குறித்து மனம் திறந்த ரித்திகா ‘இந்த விருது எனக்கு ஆஸ்கர் கிடைத்தது போல் உள்ளது’ என கூறியுள்ளார். இது மட்டுமின்றி உங்களுக்கு எந்த மொழியில் நடிக்க விருப்பம் என கேட்டுள்ளனர்.

அதற்கு இவர் ‘எனக்கு ஹிந்தி தான் நன்றாக தெரியும், தமிழ் தற்போது தான் கற்று வருகிறேன், இதனால், ஹிந்தி படத்தில் நடிக்கவே விருப்பம்’ என கூறியுள்ளார். தமிழ் ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடிய நிலையில் இவர் இப்படி கூறியிருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.ritika_sing001