இராட்சத காற்றாடியை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

காற்று மூலம் மின்னை உற்பத்தி செய்வதற்காக இராட்சத காற்றாடி ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

இந்த காற்றாடியின் பிளேட்கள் (Blades) ஒவ்வொன்றும் 200 மீற்றர்கள் நீளம் உடையதாக இருப்பதுடன், 400 மீற்றர்கள் விட்டம் உடைய வட்டத்தினை உருவாக்கவல்லன.

இது தவிர சுமார் 479 மீற்றர்கள் உயரமாக அமைக்கப்படவுள்ள இந்த காற்றாடியானது நியூயோர்க்கில் அமைக்கப்பட்டிருக்கும் Empire State கட்டிடத்தினை விடவும் 30 மீற்றர்கள் உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன் ஊடாக 50 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாகவும், இது பாரம்பரிய காற்றாடிகளை விடவும் 25 மடங்கு வினைத்திறன் உடையது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் தற்போது இந்த காற்றாடியின் 1/10 அளவிடையினைக் கொண்ட மாதிரிக் காற்றாடி அமைக்கப்பட்டுவருகின்றது. இதன் கட்டுமாணப் பணிகள் 2019ம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ளது.

அதன் பின்னரே முழு அளவிடையினைக் கொண்ட காற்றாடி அமைக்கப்படவுள்ளது. இதற்காக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளது.