ஒரே நேரத்தில் குவிந்த ஒரு லட்சம் பயணிகள்: ஸ்தம்பித்த ரயில் நிலையம்

சீனாவில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பயணிகள் ஒன்றாக குவிந்ததால் செய்வதறியாது அங்குள்ள முக்கிய ரயில் நிலையம் ஸ்தம்பித்துள்ளது.

சீனாவின் குவான்ஷோ ரயில் நிலையத்தின் வெளியேதான் ஒரு லட்சம் பயணிகள் ஒன்றாக குவிந்து ஸ்தம்பிக்க வைத்தனர்.

லட்சம் பயணிகள் ஒன்றாக குவிந்ததால் வழக்கமாக செல்லும் ரயில்கள் அனைத்தும் மிகவும் தாமதமாக அங்கிருந்து சென்றுள்ளது.

சீனா புத்தாண்டை கொண்டாடும் பொருட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சீனர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு படையெடுத்துள்ளனர்.

குவான்ஷோ ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகளை கட்டுப்படுத்தவே ஏராளமான பொலிசாரையும் குவித்துள்ளனர்.

கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பயணிகள் அலை மோதியதால் குவான்ஷோ ரயில் நிலையத்தில் இருந்து 32 ரயில்கள் தாமதமாக புறப்பட்டுள்ளன.

பெரும்பாலான பயணிகள் 10 மணி நேரத்திற்கும் மேலாக தங்கள் பகுதிக்கு செல்லும் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர்.

வசந்த விழா என சீன மக்களால் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு இந்த மாதம் 8 ஆம் திகதி தொடங்கி ஒரு மாதம் வரை நீடிக்கும்.

இந்த விழாவினை முன்னிட்டு ஜனவரி இறுதி வாரம் தொடங்கி மார்ச் 3 ஆம் திகதி வரை ஒட்டு மொத்தமாக 2.91 பில்லியன் பயணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.chinese_rush_002 chinese_rush_008 chinese_rush_009