சுற்றுலா பயணிகளின் தலையை உரசி சென்ற விமானம்

கடற்கரையில் நின்ற சுற்றுலா பயணிகளின் தலைக்கு அருகில் விமானம் சென்று அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரிபீயன் கடலுக்கு நடுவில் அமைந்துள்ளது செயிண்ட் மார்ட்டீன் தீவி.

சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அதேபோல் இங்குள்ள மாஹோ கடற்கரை அருகில் அமைந்துள்ள ஜூலியானா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளம் உலகில் மிகவும் ஆபத்து வாய்ந்த ஓடுதளங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

அதாவது கடற்கரையை ஒட்டியே விமான ஓடுதளமும் அமைந்துள்ளதால்  விமானங்கள் தரையிறங்கும் போதும், புறப்பட்டு செல்லும் போதும் மிகவும் தாழ்வாகவே செல்லும்.

இதனை காண்பதற்காகவே ஏராளமாக பயணிகள் இங்கு கூடுவர்.

இந்நிலையில் விமானம் ஒன்று சுற்றுலா பயணிகளின் தலையை உரசி செல்வது போன்று மிகவும் அருகில் சென்றவாறு தரையிறங்கிய காட்சி பிரமிப்பை ஏற்படுத்துள்ளது.

பாதுகாப்பான இடத்தில் இருந்தவாறு சுற்றுலா பயணி ஒருவர் இந்த காட்சியை படம் பிடித்துள்ளார்.

பயணிகளின் தலையை உரசியபடி விமானம் சென்ற காட்சிகள் அடங்கிய அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.low_aero_004