குழந்தைகளை எரித்துக் கொன்று போகோஹரம் தீவிரவாதிகள்! (வீடியோ இணைப்பு)

வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போகோஹரம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.bokoharam_child_002

இந்நிலையில், மைடுகுரி நகரில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ள டலோரி கிராமத்துக்குள் ஆயுதமேந்திய நூற்றுக்கணக்கான போகோஹரம் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு நுழைந்தனர். அங்கிருந்த வீடுகள் மீது வெடிகுண்டுகளை வீசி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட அந்த கும்பல், உயிர் பயத்தில் தப்பியோட முயன்றவர்கள் மீது கண்மூடித்தனமாக இயந்திர துப்பாக்கிகளால் சுட்டது.

சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த தாக்குதல்களில் ஏராளமான குழந்தைகள் உள்பட 86 பேர் குண்டு காயங்களாலும், தீயில் கருகியும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, பக்கத்து கிராமத்துக்கு கைக்குழந்தைகளுடன் தப்பியோடிய கும்பலுக்குள் புகுந்த மூன்று பெண் தீவிரவாதிகள், தங்களது உடல்களில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் பெரும் உயிரிழப்பு நேரிட்டதாகவும், இந்த தொடர் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன.