ஐரோப்பிய ஒன்றியத்தினால் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 360 மில்லியன் ரூபா நட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சுமார் 360 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இந்த வருமானம் இல்லாது போயுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி துசித அலுத்பட்டபெந்திகே தெரிவித்துள்ளார்.

2014 ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டு கப்பல்கள் மூலமாக 10 வீதமான மீன்கள் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தபானத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த காலப்பகுதி வரை ஒரு மாதத்திற்கு சுமார் 30 தொடக்கம் 35 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகும், இந்த வருமானம் கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து இல்லாது போயுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் ஐரேப்பிய ஒன்றியத்தினால் மீன் ஏற்றுமதிக்கு வித்திக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி துசித அலுத்பட்டபெந்தி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும், ஐரேப்பிய ஒன்றியத்தினால் தடையை நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.