கொழும்பு துறைமுகத்தில் நாசகாரி போர்க்கப்பல்

பிரித்தானிய கடற்படையின் எச்.எம்.எஸ்.டிபென்டர் எனும் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னேற்றமடைந்துவரும் நிலையில் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாயமுறைப்படி வரவேற்றுள்ளனர்.

இதேவேளை கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரட்ன, பிரித்தானியா கப்பலின் கட்டளைத்தளபதி கொமாண்டர் ஸ்டீபன் டபிள்யூஜேஏ ஹிகம் அவர்களை சந்தித்துள்ளார்.

இக்கப்பல் அங்கு தரித்திருக்கும் வேளையில் இருதரப்பு உறவுகளை அதிகரிக்கும் வகையிலான பல்வேறு நிகழ்கவுல் நடைபெற்றுள்ளது.

நடைபெற்ற நிகழ்வுகளில் பிரித்தானியா கட்டளைத்தளபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.ukship_001

ukship_004