கெமராவின் உதவியால் குழந்தையின் கண்ணிலிருந்த புற்றுநோயை கண்டுபிடித்த தாய்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசிக்கும் பெண் தனது 4 மாத கைக்குழந்தையின் கண்ணில் இருந்த பயங்கர புற்றுநோயை கெமராவின் மூலமாகவே கண்டுபிடித்த தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசிக்கும் பெண் தனது 4 மாத கைக்குழந்தையின் கண்ணில் இருந்த பயங்கர புற்றுநோயை கெமராவின் மூலமாகவே கண்டுபிடித்த தகவல் வெளியாகியுள்ளது.

புதிதாக வாங்கிய நவீனரக கெமராவால் அந்த குழந்தையை படம் பிடித்து, பின்னர் நெருக்கமாக பார்த்தபோது, கெமராவில் இருந்து வெளிப்பட்ட ‘பிளாஷ்’ வெளிச்சம்பட்டு, குழந்தையின் ஒரு கண்ணில் மட்டும் பூவிழுந்ததுபோல் தோன்றவே சந்தேகப்பட்ட அந்த தாய், உடனடியாக தனது மகனை வைத்தியரிடம் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு நடத்திய பரிசோதனையில் ’ரெட்டினோபிலாஸ்டோமா’ என்ற புற்றின் தாக்கம் குழந்தையின் கண்களில் உருவாகியுள்ளமை தெரியவந்தது.

இதர உறுப்புகளுக்கும் வேகமாக பரவி உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடக்கூடிய ஆபத்து நிறைந்த இந்த நோய்க்காக தற்போது அந்த குழந்தைக்கு நியூயோர்க் நகரில் உள்ள பிரபல புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.