கரடி தாக்கியதால் கை துண்டிக்கப்பட்ட நபர்: கூண்டின் அருகே சென்றதால் விபரீதம்

ரஷ்யாவின் Murmanaskaya பகுதியில் கூண்டில் அடைக்கப்பட்ட கரடியை நபர் ஒருவர் பாசத்துடன் வருடியுள்ளார்.

அப்போது திடீரென்று அந்த கரடி அவரது கையை பற்றிக்கொண்டு வாயால கவ்வியுள்ளது. இதனால் அந்த மனிதர் வலியால் அலறியுள்ளார்.

கரடியின் அருகே சென்ற அந்த நபரை சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அவரது நண்பர் எச்சரித்து திட்டியுள்ளார்.

ஆனாலும் நண்பரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சென்று கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கரடியை தொட்டு வருடியுள்ளார்.

கூண்டுக்குள் கை விட்டதும் அந்த திடீரென்று வாயால் கவ்வியுள்ளது, எத்தனை முயன்றும் கரடியின் பிடியில் இருந்து அந்த நபரால் கையை விடுவிக்க முடியவில்லை.

இதனிடையே இந்த காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் சுதாரித்துக்கொண்டு கரடியிடம் சிக்கிய அந்த நபரை மீட்க போராடியுள்ளார்.

முடிவில் அந்த நபரின் முழங்கை வரை கரடியின் வாயில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர்.

பலத்த காயமுடன் தப்பிய அந்த நபர் முழங்கை வரை துண்டிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.russian_rippedoff_005