வட மாகாண சுகாதார அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடு

உலக வங்கியின் 2016ஆம் ஆண்டிற்கான சுகாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்திற்கு 365 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் சுகாதார திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் கொழும்பில் உள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் உலக வங்கியின் 2016ஆம் ஆண்டிற்கான சுகாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாகாண சுகாதார திணைக்களங்களிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்போதே வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்திற்கும் சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளுக்காக 365 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் சகல மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்கள் மற்றும் சுகாதார திணைக்களப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.