மனைவியின் மூக்கை அறுத்த கணவர்: ஆப்கானில் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறை

ஆப்கானிஸ்தானில் மனைவியை மூக்கை அறுத்த கணவரின் செயலுக்கு உலகமுழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஆப்கானிஸ்தானின் ஃபர்யாப் மாகாணத்தை சேர்ந்தவர் முகமத் கான்.

இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 15 வயதேயான ரீஷா குல் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் திருமணத்துக்கு பின் ஈரான் நாட்டிற்கு சென்ற முகமத் சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆப்கான் திரும்பியுள்ளார்.

மேலும் 7 வயதேயான சிறுமி ஒருவரை அவர் இரண்டாவது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து முதல் மனைவி குல்லை முகமத் அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று குல்லை அடித்து கொடுமை படுத்திய முகமத் கையில் வைத்திருந்த சிறு கத்தியால் குல்லின் மூக்கை அறுத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த குல் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மூக்கு பகுதி முற்றிலும் சிதிலமடைந்துள்ளதால் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

உள்ளூர் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் துருக்கிக்கு அழைத்து செல்லப்படலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக முகமத் தலிபான்களின் ஆதிக்கமுள்ள பகுதியில் அடைக்கலம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்நாட்டு மகளீர் உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

மேலும் சமூக வலைத்தளத்தில் குல்லில் புகைப்படம் வைரலாக பரவியதையடுத்து முகமுதுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.