மசகு எண்ணெய்யின் விலை மேலும் குறைவடையும்

மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டு வருவதையடுத்து, அந்நாடு மசகு எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 5 இலட்சம் பீப்பாய்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

தேவைக்கு அதிகமாக உற்பத்தி இருப்பதால் சந்தையில் அதிகளவான மசகு எண்ணெய் கிடைக்கப்பெறும் சாத்தியப்பாடு காணப்படுவதால் மசகு எண்ணெய்யின் விலை மேலும் குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மசகு எண்ணெய் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் 29 டொலருக்கும் குறைவாகவே காணப்படுகின்றது.