மக்களின் உடல் நிறை அதிகரிப்பினை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசின் புதிய நடவடிக்கை

இங்கிலாந்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை அதிகரித்து உடல் பருமனாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. எனவே, அதை தடுக்க இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை மையம் புதிய திட்டம் வகுத்துள்ளது.

இனிப்புப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதாக பரவலான கருத்து நிலவுகிறது. எனவே, இனிப்பு கலந்த பொருட்கள் மற்றும் உணவு பொருட்களுக்கு ‘சர்க்கரை வரி’ என்ற புதிய வரி விதிக்கப்பட உள்ளது.

வருகிற 2020 ஆம் ஆண்டு இதை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 20% வரிப்பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வைத்தியசாலை மற்றும் சுகாதார மையங்களில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளில் விற்கப்படும் இனிப்புப் பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது. இதன் பின்னர் படிப்படியாக அனைத்து இடங்களிலும் விற்பனையாகும் இனிப்பு பொருட்களுக்கும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு வருடத்திற்கு ரூ.200 கோடி முதல் ரூ.400 கோடி வரை வருமான அதிகரிப்பு ஏற்படும். அதே நேரத்தில் மக்களின் உடல்நலம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.