சீனப் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி; ஏனைய நாடுகளையும் பாதிக்கும் அபாயம்

சீனப் பொருளாதார வளர்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் தொகையில் உலகின் முதலிடத்திலும், இந்த ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.3 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு 6.9 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளி விவரங்கள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவில் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்திருப்பதால் உலகம் முழுவதும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.