சம்பந்தனுக்கு ‘வாழும் வீரர்’ விருது! கனடா சென்று பெற்றுக்கொண்ட சுமந்திரன் பா.உ.

கனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ‘வாழும் வீரர்’ (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளித்துள்ளது.

சம்பந்தன் சார்பாக அந்த விருதை கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கனடா சென்று பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன், குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் யோன் மக்கலம், ஒன்ரேறியோ மாகாண முதலமைச்சர் கத்லீன் வின், ஒன்ராறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அன்ரியா கோர்வத், ரொறன்ரோ மாநகர சபை முதல்வர் யோன் ரோறி, மார்க்கம் நகர சபை மேயர் பிராங் ஸ்காப்பித்தி, இஸ்ரோவில் மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று மட்ட அரசுகளில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட 50ற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.