கரிச்சட்டி தலையன் விஜயகாந்த்! கொமடி நடிகை வாசுகி பேச்சு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை கரிச்சட்டி தலையன் என அதிமுகவை சேர்ந்த கொமடி நடிகை வாசுகி விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர்-ன் 99வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் கொடைக்கானலில் நடந்தது.

அப்போது கொமடி நடிகை வாசுகி பேசுகையில், நான் வரும் அவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டே வந்தேன், அங்கங்கே பிளீச் மண்டையன், கரிச்சட்டி தலையன் விஜயகாந்த் இருக்கானே.. எங்க பார்த்தாலும் எப்ப பார்த்தாலும் எங்க அம்மாவையும் கட்சிக்காரர்களையும்..அரசியல் நாகரிகமே அவனுக்கு தெரியாது..கருச்சட்டி தலையனுக்கு டயலாக்கே பேச தெரியலை.

தலைவர் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கட்சிக்காரர் யார் இருந்தாலும் எனக்கு கவலையில்லை, போன் செய்து சொல்லட்டும்..29 சீட் கொடுத்திருக்கோம்.விஜயகாந்த் யாருன்னே தமிழக மக்களுக்கு தெரியாது. உன்னை தமிழ்நாட்டு மக்களுக்கே அடையாளம் காண்பித்தது எங்க அம்மா புரட்சி தலைவி.

என்னமோ பொங்கல் விழா கொண்டாடுறானாம்… பொண்டாட்டியை பக்கத்துல வெச்சிக்கிறான்… அவன் மச்சினனை பக்கத்துல வெச்சிக்கிறான்.. இவங்க 3 பேருதான் கட்சியில இருக்காங்க.. வேற யாருமே இல்ல..

வேலூர்ல பொங்கல் கொண்டாடும்போது சொல்றான்… அடுத்த பொங்கலை எங்கள் கேப்டன் முதலமைச்சராகித்தான் கொண்டாடுவாராம்… ஏண்டா முதலமைச்சர்னா கிள்ளுக்கீரைன்னு நினைச்சீங்களா?

முதலமைச்சர் ஆவதற்கு தகுதி இருக்கா? என சரமாரியாக தாக்கி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகை வாசுகி