அவன்ட் கார்ட் நிறுவனம் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு வாபஸ்!

அவன்ட் கார்ட் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.
நிறுவனத்திற்கு சொந்தமான 91 ஆயுதங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை இந்த ஆண்டுக்கு புதுப்பிக்காமை தொடர்பில், அவன்ட் கார்ட் நிறுவனமும், அதன் தலைவர் நிசாங்க சேனாதிபதியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த ரீட் மனு நேற்று வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மனு கட்டணமின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதவான் விஜித மலலேகொட, நீதவான் தேவிகா லிவெரா தென்னக்கோன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவில் கோரப்பட்ட நிவாரணம் கிடைத்துள்ளதாகவும், இதனால் மனுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை எனவும் மனுதாரர் சட்டத்தரணி ஊடாக அறிவித்துள்ளார்.