அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் சுவிஸில் வாக்குப்பதிவு! விரைவில் திகதி அறிவிப்பு!

சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதி வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் சில மாதங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு முக்கிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. அவை அந்நாட்டின் பிரதான கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளாகும்.

முதலாவதாக, அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கையாகும்.

சுவிஸில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அரசு கட்டிடங்களில் தங்க வைக்கக் கூடாது. மேலும், அகதிகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளை வழங்கும் வழக்கறிஞர்களை அரசு நியமிக்கக்கூடாது என்பதே அவையாகும்.

அகதிகளை கவர்ந்து இழுக்கும் நாடாக சுவிட்சர்லாந்து இருக்க கூடாது. நேர்மையான, போலித்தன்மை இல்லாத அகதிகளுக்கு மட்டுமே புகலிடம் வழங்க வேண்டும்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் அகதிகளை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு ஆதரவாக ஏற்கனவே 65,000 பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

சுவிஸ் மக்கள் கட்சி கோரியுள்ள இந்த சட்டமானது சுவிஸில் குடியேற முயலும் தமிழர்களுக்கு சாதகமாக அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இரண்டாவதாக, சுவிட்சர்லாந்து நாட்டின் இடது சாரி கட்சிகள் அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

அதில் சுவிஸ் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தற்போது இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு ஏற்க கூடாது. ஏனெனில், இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் பொதுமக்கள் தொலைபேசி மற்றும் இணையத்தளம் வழியாக மேற்கொள்ளும் உரையாடல்களை ஒட்டுக்கேட்க உதவுகிறது.

இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டித்ததுடன் இதற்கு எதிராக மக்களிடம் இருந்து சுமார் 67,000 கையெழுத்துக்களை பெற்று அரசிடம் அக்கட்சி ஒப்படைத்துள்ளது.

இந்த இரண்டு சட்டங்களுக்கும் அரசு கடந்த வருடமே ஒப்புதல் வழங்கியது. இருப்பினும், இது தொடர்பாக மக்களிடம் இறுதி வாக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் அதற்கான ஒரு திகதியை அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.