நிலவின் இருள் நிறைந்த பகுதியில் காலடி பதிக்கும் சீனா

பூமியிலிருந்து மனிதன் நிலவு, செவ்வாய் கிரகம் என பல அண்டவெளியிலுள்ள வான் பொருட்களையும் ஆய்வு செய்து விஞ்ஞானத்தின் உச்சத்தில் இருக்கிறான்.

எனினும் நிலவில் தரையிறங்கிய மனிதனால் இதுவரை அங்கு காணப்படும் இருள் நிறைந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை.

ஆனால் எப்போதும் இருளாக இருக்கும் குறித்த பகுதியில் முதன் முறையாக 2018ம் ஆண்டு காலடி பதிப்பதற்கு சீனா முனைப்புக்காட்டி வருகின்றது.

இதன்படி Chang’e-4 எனும் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் தரையிறங்கவுள்ளதை சீனா உறுதி செய்துள்ளது.