வெளிநாடுகளில் தொழில் புரிந்த 40 வீதமானவர்கள் HIV நோய்த் தொற்றினால் பாதிப்பு

எச்.ஐ.வீ. நோய்த் தொற்றுக்கு இலக்காகியவர்களில் 40 வீதமானவர்கள் வெளிநாடுகளில் கடமையாற்றியவர்கள் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எச்.ஐ.வீ. நோய்த் தொற்றுக்கு இலக்கான 40 வீதமானவர்கள் வெளிநாடுகளில் தொழில்புரிந்து நாடு திரும்பியவர்கள் என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பாற்ற பாலுறவு காரணமாகவே இவ்வாறான நிலைம ஏற்படுகின்றது.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு இந்த விடயங்கள் பற்றி தெளிவூட்டப்படுவதில்லை.

இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். தெளிவுபடுத்தினால் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவதனை வரையறுக்க முடியும்.

கடந்த ஆண்டில் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்ட 236 பேர் பதிவாகியுள்ளனர். இதில் 172 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்த் தொற்று பரவியவர்களில் 41 பேர் 15 முதல் 24 வயது எல்லைகளை உடையவர்களாவர்.

எயிட்ஸ் நோய், பால் சார் நோய்கள் தொடர்பில் பாடசாலை மாணவ மாணவியருக்கு விஞ்ஞான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டாயமாக எச்.ஐ.வீ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.