பூச்சிகளை உண்ணும் வினோத தாவரங்கள்

பூச்சி உண்ணும் தாவரம் என்பது சில வகை பூச்சிகளையோ அல்லது புரோட்டோசோவாக்களையோ உண்டு தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறும் தாவரம் ஆகும்.

கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி முதல் 10,000 அடி உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரக்கூடியது. சுமார் 1 அடி உயரம் முதல் 70 அடி உயரம் வரை கொடியாக மரங்களில் தொற்றி, காற்றில் சுற்றித் திரியும் மின்மினி பூச்சி முதல் குழவிகள் வரையிலான பூச்சிகளை பூஜாடி போன்ற தனது பூக்களில் வண்டு, நத்தை, குழவி என்ற பூச்சிகளை சிக்க வைத்து, இவ்வகை தாவரங்கள் சாப்பிடுகிறது.

இதே போன்று ஒவ்வொரு தாவரங்களிலும் பூச்சிகளைப் பிடிப்பதற்காகவே அவற்றின் இலைகள் அல்லது இலைகளின் பகுதிகள் சில சிறப்பு அமைப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து ஒருவகையான செரிப்பு நீர் சுரந்து பூச்சிகளைச் செரித்துக் கொள்கிறது.