வசீம் தாஜூதினின் கொலை தொடர்பாக சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும்

வசீம் தாஜூதினின் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும் என கொழும்பு பல்கலைகழகம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

வசீம் தாஜூதினின் உயிரிழப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் திரட்டப்பட்ட சீ.சீ.டி.வி காணொளிகள் ஆய்விற்காக கொழும்பு பல்கலைக்கழக கணனி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டடிருந்தது.

எனினும் சீ.சீ.டி.வி காணொளிகளில் தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த வாகனங்களின் இலக்கங்களையும் அதில் காணப்படும் நபர்களையும் அடையாளம் காணமுடியாத நிலை காணணப்படுவதாக பல்கலைகழகத்தினர் நீதிமன்றில் குறிப்பிட்டள்ளனர்.