ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவாஸ் ஷெரீப் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வரவேற்கும் நிகழ்வு இன்று (05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்ததது.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் இடையில் இன்று இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளன.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நேற்று நாட்டை வந்தடைந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நாளை வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை பலரை சந்திக்கவுள்ளார்.