2015 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம்; சங்கக்கார சாதனை

2015 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் குவித்தவர்கள் வரிசையில் குமார் சங்கக்கார 5 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

இவருடன் வில்லியர்ஸும் 5 சதங்களை விளாசி சங்காவுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்து அம்லா, டில்சான், டெய்லர், கப்டில் ஆகியோர் 4 சதங்களை விளாசி இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

இந்த வருடம் நிறைவடைய ஒருநாள் மாத்திரமே காணப்படும் நிலையில் சங்கா முதலிடத்திலேயே காணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெறுமனே 14 போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றியே சங்கா 5 சதங்களை விளாசியுள்ளார். இதில் உலகக்கிண்ணத்தில் இவர் தொடர்ச்சியாக விளாசிய 4 சதங்களும் உள்ளடக்கம். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை விளாசியமையும் ஒரு சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளுடன் குமார் சங்கக்கார சர்வதேச பொட்டிகளிலிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.