மைத்திரிக்கு ஒபாமா அனுப்பிய செய்தியுடன் இலங்கை வந்தார் பிஸ்வால்!

இலங்கை ஜனாதிபதிக்கு விசேட செய்தி ஒன்றினை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், இன்று அதிகாலை 5 மணியளவில், ஜெட் எயர்வேய்ஸ் விமானம் மூலம், மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விசேட செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில், இலங்கை அரசாங்கம் மெத்தனப் போக்குடன் செயற்படுவது குறித்து, நிஷா பிஸ்வால், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம், கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றதில் அமெரிக்க அரசாங்கம் பிரதான பங்கை வகித்தாக பல அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.