ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த வேர்க்கடலை வெண்ணெய்! சாப்பிட்டு பாருங்கள்

வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும்.

மாங்கனீஸ், மாவுச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது.

இதிலிருந்து செய்யப்பட்ட வேர்க்கடலை வெண்ணெய்யும் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்

புரோட்டின், நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு, பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடண்ட், மெக்னீசியம் நிறைந்துள்ளது. விட்டமின் ஏ டி பி12 போன்ற சத்துக்கள் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

மருத்துவ பயன்கள்

2 டேபுள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய்யில் 7 கிராம் புரோட்டின் உள்ளது, இதனை சாப்பிடுவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி மேம்படும்.

வேர்க்கடலை வெண்ணெய்யில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளதால் இதயப்பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

இதில் அளவுக்கதிகமான பொட்டாசியம் நிறைந்திருப்பதால், உடலில் ஏற்படும் சோடியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

வேர்க்கடலை வெண்ணெய் என்றாலே கொழுப்பு நிறைந்தது என்ற கருத்து உள்ளது, ஆனால் இவற்றில் நிறைவுறாத கொழுப்புகளை(unsaturated fat) விட நிறைவுற்ற கொழுப்புகளே(saturated Fat) அதிகம்.

ஆலிவ் ஆயில், அவகேடா போன்றே வேர்க்கடலை வெண்ணெய்யும் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்பை வழங்குகின்றன.

இதனை காலை உணவாக எடுத்துக்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுற்றுப்போடு இயங்கலாம்.

விட்டமின் ஏ டி பி12, கார்போஹைட்ரேட், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

நிறைய குழந்தைகள் சூயிங் கம்களை சாப்பிட்டு, அதனை வீட்டில் ஆங்காங்கு ஒட்டியிருப்பார்கள். அப்போது அத்தகைய பசைகளை போக்க, முதலில் அந்த பசைகளை முடிந்த வரையில் கைகளால் எடுத்துவிட்டு, பின் அங்கு சிறிது வேர்க்கடலை வெண்ணெயை தேய்த்து எடுத்தால், எளிதில் அங்குள்ள பசையானது முற்றிலும் நீங்கிவிடும்.

வேர்க்கடலை ஸ்மூத்தி

முதலில் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வேர்க்கடலை வெண்ணெய், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு, அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி ரெடி!

பயன்கள்

கோடைகாலத்தில் குடிப்பதன் மூலம் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு கொடுப்பதால் எலும்பு வளர்ச்சி மேம்படும்.