வைரலாகும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் மகள் படம்

லட்சம் லைக்குகளையும் தாண்டி ஃபேஸ்புக்கில் வைரலாகிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், புதிதாக பிறந்த தனது மகளுடன் எடுத்து பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று. அமெரிக்காவின்  சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தையை பராமரிப்பதற்காக குறிப்பிட்ட மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான பணியாளர்களல் போட்டி மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை கருத்தில்கொண்டு அதனை எடுப்பதில்லை.

ஃபேஸ்புக் நிறுவனத்திலும் இத்தகைய விடுப்புச் சலுகை உள்ளபோதிலும், அதனை யாரும் பயன்படுத்தாத நிலையில் அதன் நிறுவனரான மார்க் சக்கர் பெர்க்கே, கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்பதால்,  “நல்ல அப்பாவா நான் இரண்டு மாசம் லீவ் எடுத்துட்டு வரேன்” என்று ஸ்டேடஸ் போட்டுவிட்டு விடுமுறையில் சென்றிருந்தார்.  இந்நிலையில் அவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவர் புதிதாய் பிறந்த தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்டிருந்தார். “மனம் கொள்ளா மகிழ்ச்சியில் லிட்டில் மேக்ஸ் உடன்” என்ற கேப்சனுடன் அவர் பதிவிட்ட அந்த புகைப்படம், லைக்ஸ்களை குவித்து வருகிறது.  இதுவரை 25 லட்சத்திற்கும் மேல் தாண்டி லைக்ஸ் போடப்பட்டுள்ளது.